வாழ்க்கையில் எந்த காரியத்தைச் செய்தாலும் வெற்றி கிட்டாதவர்கள், மனதில் பயம் உள்ளவர்கள், இரவில் சரியாகத் தூக்கம் வராதவர்கள், ஜாதகத்தில் சூரியன் நீசமாக அல்லது பலவீனமாக இருப்பவர்கள், தந்தை- மகன் உறவு சரியில்லாதவர்கள், உட ல் பித்தம் அதிகமாக இருப்பவர்கள், கண்ணில் நோய், எலும்பில்பாதிப்பு, காதில் நோய், இதயத்தில் பிரச்சினை, ஆயுதத் தால் காயம், அடிக்கடி ஜுரம் போன்ற பாதிப்புள்ள வர்கள், பதவியில் பிரச்சினையுள்ள அரசியல்வாதிகள், வேலையில் சிக்கலுள்ள வங்கிப் பணியாளர்கள், தொழி ல் பிரச்சினை உள்ளவர்கள், கெட்ட கனவு காண்பவர்கள்- இதுபோன்ற தொல்லையுடைய எல்லாரும் ஞாயிற்றுக்கிழமை விரதமிருக்க வேண்டும்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் சூரியன் லக்னத் திலோ 2-ஆம் பாவத்திலோ இருந்து, அதை பாவகிரகம் பார்த்தால் அல்லது பாவகிரகத்துடன் இருந்தால்,அவருக்கு பித்தம் காரணமாக தலைவ- அதிகமாக இருக்கும். 2-ஆம் பாவத்தில் இருக்கும் சூரியனை பாவகிரகம் பார்த்தால் அல்லது பாவகிரகத்துடன் இருந்தால், தந்தை- மகன் உறவு சரியாக இருக்காது. அதிகமான பித்தம் இருக்கும். சரியான நேரத்தில் உணவு சாப்பிட மாட்டார். 3-ஆம் பாவத்தில் சூரியன், ராகுஅல்லது சூரியன், செவ்வாய், ராகுஅல்லது சூரியன், சனி, ராகு இருந்தால், அந்த ஜாதகருக்கு சகோதரர்களுடன் பிரச்சினை இருக்கும். வீணான விவாதங்கள் உண்டாகும். 4-ல் சூரியன் தனித்திருந்தால், தந்தை யால் நன்மை இருக்காது.

ss

தந்தையின் சொத்தில் பிரச்சினைகள் உண்டாகும். 4-ஆம் பாவத்திலுள்ள சூரியனை சனி பார்த்தால் பலருக்கு இதயநோய் வரும். ரத்த அழுத்தம் உண்டாகும். 5-ஆம் பாவத்தில் சூரியன் இருந்து அதை பாவகிரகம் பார்த்தால் அல்லது சூரியன், செவ்வாயுடன் இருந்தால்அல்லது சூரியன், சனி 5-ஆம் வீட்டில் இருந்து, அதை இன்னொருபாவகிரகம் பார்த்தால், அந்த ஜாத கருக்கு பிள்ளைகள் பிறக்கும்போது பிரச் சினை ஏற்படும். சிலருக்கு வயிற்றில் குழந்தை இருக்கும்போது பிரச்சினை உண்டாகும். சூரியன் 6-ல் இருந்தால் நல்லது. ஆனால், அந்த சூரியன், சந்திரன்- சுக்கிரனுடன் சேர்ந்தால் கண்ணில் நோய் உண்டாகும். சூரியன், சனி, செவ்வாய் இருந்தால், உடலில் பல நோய்கள் உண்டாகும். ஜாதகத்தில் 7-ஆம் பாவத்தில் சூரியன் இருந்தால் நல்ல மனைவி அமைவாள். ஆனால், அந்த சூரியனுடன் சனி, செவ்வாய் சேர்ந்தால், திருமணம் நடக்கும்போது இறுதி நிமிடத்தில் திருமணம் நின்றுவிடும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும்.

Advertisment

சூரியன், செவ்வாய், ராகு 7-ல் இருந்தால் களத்திர தோஷம் உண்டாகும். மறுமணம் செய்யும் சூழல் உண்டாகும். சிலரின் மனை விக்கு குறைந்த ஆயுள் காலமே இருக்கும். 8-ல் சூரியன் இருந்தால் பல நன்மைகள் நடக்கும். ஆனால் அந்த சூரியன், சந்திரன்- புதனுடன் சேரும்போது உடலில் பிரச்சினைகள் ஏற்படும். சூரியன், செவ்வாய், ராகு அல்லது சூரியன், சுக்கிரன், செவ்வாய் இருந்தால் இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. 9-ஆவது பாவத்தில் சூரியன் இருந்தால்ஜாதகருக்கு நன்மைகள் நடக்கும். ஆனால், அதை ராகு பார்த்தால் அல்லது சூரியன், செவ்வாய், சனி சேர்ந்திருந்தால், தந்தை- மகன் உறவு சரியாக இருக்காது. குருவால் பார்க்கப்பட்டால், அவர் பெரிய ராஜதந்திரியாக இருப்பார். சூரியன் 10-ல் இருந்தால், அரசாங்கத் தின்மூலம் லாபம் இருக்கும். சூரியன், செவ்வாய்,ராகு 10-ல் இருந்தால் பெரிய பதவி கிடைக்கும். ஆனால், இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. 11-ல் சூரியன் இருந்தால் தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். பண வசதி இருக்கும். ஆனால், சூரியன், செவ்வாய், ராகு அல்லது சூரியன், செவ்வாய், சனி இருந்தால் குழந்தை உருவாகும்போது பிரச்சினை உண்டாகும். 12-ல் சூரியன் இருந்தால் நன்மைகள்நடக்கும். ஆனால், சூதாட்டத்தில் ஈடுபட்டால் பல பிரச்சினைகள் உண்டாகும். சூரியன், சனி,செவ்வாய் அல்லது சூரியன், சனி, ராகு இருந்தால் கோபம் அதிகமாக வரும். தந்தையுடன் உறவு சரியாக இருக்காது.

பரிகாரங்கள்

ஞாயிற்றுக்கிழமை சூரியனை மனதில் நினைத்து விரதமிருந்தால் தோஷங்களிலிருந்துவிடுதலை கிடைக்கும். வளர்பிறையின் முதலா வது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பித்து ஒருவருடம் விரதமிருக்கலாம். அல்லது 30 ஞாயிற்றுக் கிழமைகள் இருக்கலாம். குறைந்தபட்சம் 12 ஞாயிறுகளாவது விரதமிருக்க வேண்டும். அன்றைய தினம் ஒருவேளை மட்டும் கோதுமையில் செய்யப்பட்ட சப்பாத்தி, பருப்பு,கோதுமை அல்வா, வாழைப்பழம் மட்டும் சாப்பிட வேண்டும்- அதுவும் சூரியன் மறை வதற்கு முன்பு. உப்பு சேர்க்கக்கூடாது. சாப்பிடுவதற்கு முன்பு, உணவின் ஒரு பகுதியை ஏழைகள் அல்லது குழந்தைகளுக்குத் தரவேண்டும். கோவிலுக்கு உணவை தான மாகவும் தரலாம். காலையில் குளித்து முடித்து, சிவப்பு சந்தனத்தை வைத்து, ஒரு செம்பு நீரில் மலர், அரிசி, குங்குமம் ஆகியவற்றைக் கலந்து சூரியனுக்கு விடவேண்டும். "ஓம் ஹாம் ரீம் ரோம் ஷ' அல்லது "ஓம் க்ரீனி சூர்யாய நமஹ' என்ற மந்திரத்தை ஏழு மாலைகள் (7*108) கூறவேண்டும்.

மகேஷ் வர்மா

செல்: 98401 11534